முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க. அரசு செயல்படுகிறது அனைத்துலக வள்ளலார் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2026      தமிழகம்
CM-1-2026-02-15

சென்னை, அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று சென்னையில் அனைத்துலக வள்ளலார் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைக்கு பெயர்... 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் மைதானத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாட்டை முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு மாநாட்டில் பல்வேறு ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை முதல்வர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து வள்ளலார் சர்வதேச மையத்தின் முடிவுற்ற கட்டுமானப் பணிகளைக் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு "வள்ளலார் நெடுஞ்சாலை" என புதிதாக பெயர் சூட்டி பெயர்ப்பலகையை காணொலி காட்சி மூலம் முதல்வர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புரட்சியாளர் வள்ளலார்...

பின்னர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- அனைத்துலக வள்ளலார் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுகள். நம் சேகர் பாபுவை பொறுத்தவரை கழகப்பணியிலும், அரசின் சார்பில் நடைபெறும் ஆன்மீகப் பணியிலும் சிறப்பாக ஈடுபட்டு, தான் ‘செயல்’ பாபு என்று நிரூபித்து வருகிறார். தமிழ் சமூகத்தில் உதித்த புரட்சியாளர் வள்ளலார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று சொல்லி உலகிற்கே ‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார். அவர் வழியில்தான் திராவிட மாடல் அரசும் ஏழை எளிய மக்களின் பசியை ஒழிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கோவில் சொத்துகள்... 

வள்ளலாரின் உயரிய கருத்துகளை, வாழ்வியல் நெறிகளை உலகெங்கும் போற்றிடும் வகையில் அனைத்துலக வள்ளலார் மாநாடு நடைபெறுகிறது. ரூ.8,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்டு சாதனை படைத்துள்ளோம். 864 கோவில்களில் ஒரு வேளை அன்னதான திட்டம் அமலில் உள்ளது. வள்ளலார் கோட்பாடுகளுக்கு செயல் வடிவம் கொடுத்து வருகிறோம். 

முப்பெரும் விழா...

வள்ளலாரின் 200-ஆவது பிறந்தநாள் - தருமசாலை நிறுவப்பட்ட 156-ஆவது ஆண்டு தொடக்கம் - ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-ஆவது ஆண்டு ஆகியவற்றை இணைத்து, 2022 அக்டோபரில் இருந்து 2023 அக்டோபர் வரை தொடர்ச்சியாக ஓராண்டு காலம் முப்பெரும் விழாக்களை கொண்டாடினோம். அதுமட்டுமல்ல, ‘வள்ளலார் 200’ என்ற பெயரில் இலச்சினை, அஞ்சல் உறை, சிறப்பு மலர் வெளியிட்டு அன்னதானம், மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். 

இல்லம் புனரமைப்பு...

வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லத்தை புனரமைத்தோம். தைப்பூசத்தை முன்னிட்டு, வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில், மூன்று நாட்கள் அங்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்றைக்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு “வள்ளலார் நெடுஞ்சாலை” என்று பெயர் சூட்டி திறந்து வைத்திருக்கிறோம். இந்தச் சாதனைகளின் தொடர்ச்சியாகதான், வள்ளலார் பற்றாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில், அவரின் உயரிய கருத்துகளை, வாழ்க்கை நெறிகளை, உலகெங்கும் போற்றிடும் நோக்கத்துடன் இன்று, அனைத்துலக வள்ளலார் மாநாடு நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து