எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 05.01.2026 அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உயர்கல்வி துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில்” என்னும் மாபெரும் திட்டத்தில் 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
அவ்வாறாக, தமிழகம் முழுவதும் உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று, கிண்டி பொறியியல் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரிகளை சார்ந்த 1,657 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழுத் தலைவர் ஆர்.துரைராஜ், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமரேசன், கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் பி. ஹரிஹரன், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


