முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடான் மீதான வர்த்தக தடையை நீக்கும் அமெரிக்கா

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: சூடான் மீதான 20 ஆண்டுகால வர்த்தக தடையை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதை அடுத்து அந்நாடு வரவேற்பு தெரிவித்துள்ளது.

தீவிரவாதத்துக்கு உதவுகிறது என்று ஆப்பிரிக்க நாடான சூடான் மீது 20 ஆண்டுகள் வர்த்தக தடையை அந்நாட்டின் மீது அமெரிக்கா விதித்திருந்தது.

இந்த நிலையில் சூடான் மீதான தடை நீக்க முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளதாக வாஷிங்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து "சூடான் வெளியுறவு அமைச்சர் கூறியதாக சினுவா வெளியிட்ட செய்தியில், சூடான் மீது விதிக்கப்பட்ட வர்த்தக தடையை நீக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை சூடான் தலைவர்களும், மக்களும் வரவேற்கிறோம்.

வெளிப்படையான பேச்சு வார்த்தைகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகள் விலகும்" என்றார்.

அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து சூடான் வெளியிட்ட அறிக்கையில், தொடர்ந்து நாங்கள் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு அளிப்போம். மேலும் சர்வதேச அளவில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்தி பயங்கரவாதம், மனித கடத்தல் ஆகியவற்றை எதிர்த்து போராடுவோம். அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான உறவு வைத்து கொள்ள சூடான் ஆவலாக உள்ளது. அதற்கு உடனடியாக தீவிரவாதத்தை உதவும் நாடுகளின் பட்டியலிலிருந்து சூடானை அமெரிக்கா நீக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து