ரூ.360 கோடி மதிப்பீட்டில் பர்கூர் சிப்காட்டில் காலணிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      தமிழகம்
CM Parkur Footwear factory 2017 10 11

சென்னை, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சிப்காட் தொழில்வளாகத்தில் 360 கோடி ரூபாய் செலவில் லோட்டஸ் புட்வேர் எண்டர்பிரைசஸ் மற்றும்அதன் துணை நிறுவனங்களான பேர்வே எண்டர்பிரைசஸ் மற்றும் செய்யார் சிறப்பு பொருளாதார மண்டல வளர்ச்சி நிறுவனங்களால் நிறுவப்பட்டுள்ள காலணி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பர்கூர் சிப்காட் தொழில் வளாகத்தில், செய்யார் சிறப்பு பொருளாதார மண்டலவளர்ச்சி நிறுவனம், அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் நில மேம்பாடு மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் லோட்டஸ் புட்வேர் என்ற நிறுவனம் அதனுடைய துணை நிறுவனமான பேர்வே எண்டர்பிரைசஸ் நிறுவன தொழிற்சாலையை சிறப்பு பொருளாதார மண்டலமாக செயல்படுத்த உள்ளது. இப்புதிய காலணி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்காக பர்கூர் சிப்காட்தொழில் வளாகத்தில் 146.72 ஏக்கர் நிலம், பர்கூர் சிப்காட் நிறுவனத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலமாக சுமார் 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்பி. பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன், சிப்காட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர். வாசுகி, செய்யார்சிறப்பு பொருளாதார மண்டல வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சுனில் தனேஜா, இயக்குநர் ரிக்கி லா, துணைத் தலைவர். அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்கலந்து கொண்டார்கள்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து