அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ: பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

வியாழக்கிழமை, 12 அக்டோபர் 2017      உலகம்
usa 2017 10 12

சாண்டாரோசா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடபகுதியில் உள்ள வைன், நாபா, சோனோமா, யூபா, ஆரஞ்சு ஆகிய மாவட்டங்கள் மலைப் பிரதேசங்களில் அமைந்தவை. இங்குள்ள ஒரு காட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென தீ பிடித்துக் கொண்டது. அப்போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் காட்டுப் பகுதிக்கு அருகில் அமைந்த பல நகரங்களுக்கும் இந்த தீ மளமளவென பரவியது. குறிப்பாக கலிபோர்னியாவின் வைன், நாபா, சோனாமோ, யூபா, ஆரஞ்சு உள்ளிட்ட 8 மாவட்டங்களின் 200 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு தீ பரவியது. சோனோமா மாவட்டத்தில் சுமார் 1¾ லட்சம் மக்கள் வசிக்கும் மிகப்பெரிய நகரான சாண்டா ரோசா நகருக்கும் தீ பரவியது.

இதில் 14-க்கும் மேற்பட்ட இடங்களில் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த நகரில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சாண்டா ரோசா நகரில் மட்டும் 1,500க்கும் மேலான வீடுகள், வணிக மையங்கள், மளிகை கடைகள், சுற்றுலா விடுதிகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த காட்டுத் தீயில் சிக்கி தற்போது வரை 23 பேர் பலியாகியுள்ளனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து