நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: கலெக்டர் .மு.ஆசியா மரியம் ஆய்வு

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      நாமக்கல்
4

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கார்கூடல்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை கலெக்டர் .மு.ஆசியா மரியம் இன்று (25.10.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழிப்புணர்வு

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கார்கூடல்பட்டி ஊராட்சி மற்றும் சின்ன மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் குடியிருப்பு பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு குழு மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், கொசு ஒழிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதையும், கொசு மருந்து அடிக்கப்பட்டு வரும் பணியினையும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள தொட்டிகள் மற்றும் டிரம்களில் கொசுப்புழு வளராமல் தடுக்க அபேட்டு மருந்து தெளித்தல், சாலை ஓரங்கள், நீர் தேங்கும் பகுதிகளில் சுத்தம் செய்தல், பிளிச்சீங் பவுடர் போடப்பட்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் கலெக்டர் .மு.ஆசியா மரியம் ; பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம், டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்துகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் சுத்தமான நீரில் மட்டுமே ஏ.டி.எஸ் எனப்படுகின்ற டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதால் நீர் சேமிக்கும் பாத்திரங்களை கட்டாயம் மூடி வைக்கவேண்டும் எனவும், அதிக நாட்கள் நீரை சேமிக்காமல் தேவைகேற்ப நீரை சேமித்து வைக்கவேண்டும் எனவும், வீடுகளைச் சுற்றி தேவையற்ற பொருட்களை வைக்கக் கூடாது எனவும், பழைய டயர்கள், தேங்காய்சிரட்டைகள், உடைந்த பிளாஸ்டிக்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும், காய்ச்சல் ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று உரிய பரிசோதனைகளை செய்து கொண்டு, இலவசமாக சிகிச்சைகள் பெற்றுக்கொள்ளலாம் எனவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்;பு அளிப்பதோடு, வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் நீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மேலும் கார்கூடல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுகளையும், நீர் சேமித்துள்ள தொட்டியினையும், கழிப்பறைகளையும் கலெக்டர் .மு.ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், .சாந்தி, உதவி பொறியாளர்கள் சீனிவாசன், சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் .செல்வி உட்பட வளர்ச்சித்துறை, மருத்துவத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து