சர்வ சேவ் வித்யாலயா பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      காஞ்சிபுரம்
Kanchipuram 2017 10 25

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மணித்தோட்டம் கிராமத்தில் இயங்கி வரும் சர்வ சேவ் வித்யாலயா மெட்ரிக்குளேஷன் பள்ளி மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சி இணைந்து டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி வளாகத்தில் நடந்தது.

 டெங்கு விழிப்புணர்வு

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சந்தானம் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் கலந்து கொண்டு மாணவ-மாணவியர்கள் டெங்கு கொசுவினை அழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வீடுகளை சுற்றி மழை நீரை தேங்கவிடாமல் சுற்றுப்புறத்தினை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், உபயோகமற்ற பொருட்களை அகற்றுவது, டெங்குவின் பாதிப்புகள், டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள், தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறினார்.

மேலும் டெங்கு தடுப்பு குறித்த உறுதி மொழியினை பள்ளி மாணவ- மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர். பின்னர் மாணவ-மாணவியர்களுக்கு நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள் பேரூராட்சி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து