முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடற்பயிற்சியால் உருமாறும் உடல்

வெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

பசியின்மை, தூக்கமின்மை, மெலிந்த உடல், எதிலும் ஈடுபாடின்மை, அதிகப் படியான உடல் சோர்வு போன்ற சிறு பிரச்னைகள் முதல் குழந்தையின்மை, அதிகப்படியான உடல் பருமன், மாதவிடாய் கோளாறுகள், விறைப்பு தன்மையில் சிக்கல் போன்ற பெரிய பிரச்சினைகளுக்கும் மருத்துவர்கள் சொல்லக்கூடிய கார ணம் ஹார்மோனல் இம்பேலன்ஸ் Harmone  என்றால் என்ன? அது நம் உடலில் எங்கிருக்கிறது? என்ன செய்கிறது? அதில் மாற்றம் ஏற்பட்டால் நம் வாழ்க்கையே ஏன் புரட்டிப்போடுகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Harmone  என்றால் என்ன?

Harmone என்பது நம் கண்களுக்கு புலப்படாத ஒருவித சிறிய திரவம். இவை பெரும்பாலும் நமது உடலில் உள்ள நாளம் உள்ள சுரப்பிகள் மூலம் நேரடியாக ரத்தத்தில் கலப்பவை. மூளை, கழுத்து, நெஞ்சு, சிறுநீரகம், வயிறு மற்றும் இனபெருக்க உறுப்புகளில் உள்ள சுரப்பிகள் ஹார்மோன் என்றiழைக் கப்படும் கெமிக்கல்களை திரவங்களை சுரக்கின்றன. இவை ‘சூப்பர் ஹைவே’ என்றழைக்கப்படும். ரத்தத்தின் மூலம் உடலின் அந்தந்த பகுதிகளுக்கு சென்ற டைந்து உடலின் பல்வேறு இயக்கங்களை கட்டுப்படுத்துகின்றது.

Harmone  -களின் வேலை என்ன?


 நமது உடலின் வளர்ச்சி குறிப்பாக உயரம், உடல் இயக்கம், தசை வளர்ச்சி, இனப்பெருக்க செயல்பாடுகள், தூக்கம் மற்றும் நமது மனநிலை போன்ற செயல்கள் பலவும் இந்த Harmone  -களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.

இந்த ஹார்மோன்கள் ரத்தத்தில் சுற்றிக்கொண்டே இருந்தாலும் கூட குறிப் பிட்ட உடல் உறுப்புகளின் மேல் மட்டுமே தனது ஆதிக்கத்தைச் செலுத்தும். இதன் அளவு குறைந்தாலோ அதிகமானாலோ பல்வேறு தொந்தரவுகளை உண்டாக் கும். உதாரணமாக பிட்டியுட்டரி Gland-லிருந்து சுரக்கும் குரோத் Harmone நமது உடலின் உயரம் மற்றும் எடையை கட்டுப்படுத்தும். இது பெண்களின் உடலின் உருவாகும் சினை முட்டையின் அளவையும் கட்டுப்படுத்தும்.

தொண்டையின் முன்புறம் இருக்கக்கூடிய தைராய்டு சுரப்பி நமது உடலின் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றம் என்பது நாம் விரைவாகவோ மெதுவாகவோ செயல்படக்கூடிய திறன் மற்றும் நம் ஆநவெயட Mental Alertness  முதலியவை.

ஹார்மோன் இம்பேலன்சை கண்டறியும் முறை :  பிறப்பு முதல் இறப்பு வரை ஹார்மோன் மாற்றங்கள் நடைபெற்றாலும் கூட பெரும்பாலும் மத்திய வயதை எட்டும்போதே அதைபற்றிய அறிகுறிகளை நாம் உணர்கிறோம். குறிப்பாக மாதவிடாய் சுழற்சி நிற்கும் போதே பெண்களுக்கு அதை பற்றிய எண்ணம் உருவாகிறது. 40 முதல் 50 வயதிற்குள் பெரும்பாலான மாற்றங் கள் நடைபெறுகின்றன. சிலருக்கு 30 வயதில் கூட ஹார்மோனல் இம்பேலன்ஸ் தொடங்கலாம். இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை, அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசு மற்றும் அதிகப்படியான நச்சுகளுக்கு மத்தியில் வாழ்தல்.

கண்டறியும் முறைகள் :  கீழே குறிப்பிட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் தென்படும்.

காரணமற்ற உடல் எடை அதிகரித்தல், அதிகப்படியான வயிற்று கொழுப்பு, உடல் சோர்வு, குறிப்பாக முன் பகலிலேயே சோர்வு ஏற்படுதல், அதிகப்படியான டென்சன், கோபம், பயம், மனஅழுத்தம் மற்றும் சோர்வு, தூக்கமின்மை, அல்லது தூங்கும் நேரம் மாறுபடுதல், (இரவில் தூங்காமல் பகலில் அதிக நேரம் தூங்கு வது), அதிகப்படியான வியர்வை, குறிப்பாக இரவு நேரத்தில், அதிகப்படியான தாகம், இரவு நேரத்தில், அதிகப்படியான உணவு உட்கொள்ளுதல், தாம்பத்தி யத்தில் ஈடுபாடின்மை, அல்லது உச்சம் அடைவதில் சிக்கல், முடி உதிர்தல், மெலிதல், மாதவிடாய் சுழற்சியின் மாற்றங்கள்,

அதிகப்படியான கார்போஹைட்ரேட்ஸ் குறைத்தல், தேவையான கொழுப்பு உட்கொள்ளுதல் - தேங்காய் எண்ணெய், மீன், அவகேடோ, துளசி, அஷ்வகந்தா, இலை, பொடி உட்கொள்ளலாம். முறையான மூச்சுபயிற்சி, உடற்பயிற்சி.

ஹார்மோனல் இம்பேலன்ஸை சமன்படுத்துவதில் உடற்பயிற்சிகளே பிரதான இடம் வகிக்கின்றன. நடைபயிற்சி, ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம் பயிற்சிகள் மேற்கொள் ளலாம். குறைந்தபட்சம் வாரத்திற்கு 150 நிமிடங்கள் குறைந்தபட்சமாக உடற் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

டெஸ்டோசிரான் என்றழைக்கப்படும் ஹார்மோன் 41:4 சதவீதம் முறையான தொடர்ச்சியான பயிற்சிகளால் அதிகரிக்கிறது. இதன் மூலம் உடலின் தசைகள் வலுபெறும்.

ஐரிசின் என்றழைக்கப்படும் ஒரு வகை அதிகம் அறியபடாத ஹார்மோன் ரத்தத்தில் சுரக்கும். இதனால் க்ரோமோசோமின் நீளம் அதிகரிக்கிறது. இதனால் கேன்சர், இருதய நோய்கள், மறதி போன்ற நோய்கள் குறையும்.

பெப்டைட் y y  என்றழைக்கப்படும் வயிற்றில் சுரக்கக்கூடிய ஒருவித ஹார் மோன் நமது உணவு உட்கொள்ளும் அளவை கட்டுப்படுத்தும். அதிகப்படியான உணவு உட்கொள்வதை தடுக்கும்.

செரபோனின் என்றழைக்கப்படும் சந்தோஷ ஹார்மோன்  அதிகளவு சுரந்து நமது மனநிலையை மேன்படுத்தும்.

டோபமின் என்ற ஹார்மோன் முறையான சீரான உடற்பயிற்சியால் அதிகரித்து நமது மகிழ்ச்சி மற்றும் தாம்பத்திய சுகத்தை அதிகரிக்கும்.

குளுகோகான் என்ற ஹார்மோன்  சுரந்து ரத்தத்தில் உள்ள அதிகபடியான சக்கரையை மட்டுபடுத்தி கொழுப்பை கரைக்கும்.

எபிநெப்ரின் நார் எபிநெப்ரின் போன்ற ஹார்மோன்கள் இருதய துடிப்பு, உடலின் தட்ப வெப்பநிலை போன்றவற்றை சமன்படுத்தும்.

BANF என்றழைக்கப்படும் மூளையில் சுரக்கக்கூடிய ஒருவித ஹார்மோன் நமது மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். மேலும் மூளை செல்கள் அழிவதை தடுக்கும்.

இந்த அறிஎத்து ஹார்மோன் மாற்றங்களும் தொடர்ச்சியான முறையான உடற்பயிற்சிகளால் மட்டுமே கிடைக்கும் என்கிறார் பிசியோதெரபி மருத்துவர்.

Dr. M.செந்தில்குமார், பரத் பிஸியோ கேர், சேலம். செல்: 9842786746 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து