ஆரணியில் 70லட்சம் மதிப்பில் அமைக்கப் படும் நடைபாதை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      வேலூர்
a MINISTER

ஆரணி கோட்டை மைதானத்தில் ரூ.70லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நடைபாதையை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்தார். ஆரணி கோட்டை மைதானத்தில் எம்.பி நிதியிலிருந்து ரூ.70லட்சம் மதிப்பிலான மின்விளக்கு, மூலிகை செடியுடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அமைச்சர் ஆய்வு

இப்பணி 75 சதவீதம் முடிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்துசமயஅறநிலையத்துறை சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது, நடைபாதை அமைக்கும் பணி 75 சதவீதம் முடிந்த நிலையில் உள்ளது. இன்னும் மின்விளக்கு அமைக்கும் பணி, மூலிகை செடி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று கூறினார். உடன் ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், நகர நிர்வாகி பாரிபாபு, பாசறை மாவட்டசெயலாலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியகவுன்சிலர் ப.திருமால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து