சிவகங்கை சாம்பவிகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பெற்றோர்களுக்கான விளையாட்டுப்போட்டி

30 siva news

 சிவகங்கை.- சாம்பவிகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு, குழந்தைகளின் கல்வித்தரம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த பல்வேறு கருத்துக்களை பள்ளிச் செயலர் சேகர் மற்றும் மழலையர் தொடக்கப்பள்ளி முதல்வர் நாகராணி மற்றும் ஆசிரியைகளுடன் கேட்டு பகிர்ந்துகொண்டனர். மாணவர்களும் உற்சாகமாக இதில் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக பெற்றோர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்காக சில விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அனைத்து பெற்றோர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.    வெற்றி பெற்ற பெற்றோர்களை பள்ளிச் செயலர் சேகர் வாழ்த்தி பேசினார்கள் மற்றும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துக்குமார் உடன் சக ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து