சத்தியமங்கலம் நகராட்சி எல்லையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் பீதி

புதன்கிழமை, 1 நவம்பர் 2017      ஈரோடு
01 11 2017 ERD SATHY LEOPARD MOVEMENT IN SATHY

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் சிறுத்தை எண்ணிக்கை 111 ஐ தாண்டியுள்ளது.  பண்ணாரி, தலமலை, தாளவாடி, பவானிசாகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சிறுத்தை தென்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

சிறுத்தை நடமாடும் பகுதியில் எச்சரிக்கை பலகைகள் வைத்து இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.  இந்நிலையில் சத்தியமங்கலம் நகராட்சி எல்லையான கோப்புப்பள்ளம் என இடத்தில் நேற்றிரவு மைசூர் தேசிய நெடுச்சாலையில் சாலையின் குறுக்கே  சிறுத்தை சென்றுள்ளதை அப்பகுதிமக்கள் உறுதிபடுத்தியுள்ளனர். சத்தியமங்கலம் கோம்புப்பள்ளத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். லாரி ஓட்டுநரான இவர் சத்தியமங்கலத்தில் இருந்து  தாளவாடிக்கு தினசரி சரக்கு வாகனத்தை ஓட்டி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு இவர் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு சரக்குகளை லாரியில் ஏற்றிக்கொண்டு தாளவாடி சென்றுள்ளார். அங்கு சரக்குகளை இறக்கிவிட்டு நள்ளிரவில் புறப்பட்டு சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். சத்தியமங்கலம் நகராட்சி

எல்லையான கோம்புபள்ளம் என்ற இடத்தில் இரவு 2 மணிக்கு சாலையோரம் சிறுத்தை நிற்பதை பார்த்து லாரியை நிறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவ்வழியாக வரும் வாகனங்கள் வரிசையான நிறுத்தப்பட்டன. அப்போது, சிறிது நேரம் சாலையில் நடமாடிய  வாகனத்தின் இரைச்சல் சப்தத்தைக் கேட்டு சிறுத்தை  சாலையை கடந்து சென்றது.

இது குறித்து வனத்துறையினருக்கும் அப்பகுதியில் தோட்டத்து விவசாயிகளுக்கு ஓட்டுநர் செந்தில்குமார் தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும்  குடியிருப்பு பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை   பாதுகாப்பான இடத்தில் வைத்து பராமரிக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர். மக்கள் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடியதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து