அ.தி.மு.க உருவான பிறகு தி.மு.க. எலியாக மாறிவிட்டது - துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      தமிழகம்
OPS speech 2017 11 10

தேனி : தமிழக அரசு சார்பில் நேற்று தேனியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அ.தி.மு.க உருவான பிறகு தி.மு.க. எலியாக மாறிவிட்டது என்றார்.

தேனியில் நேற்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் தலைமையேற்று பேசிய தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசும்போது எத்தனை எதிரிகள் வேல் எரிந்தாலும், துரோகிகள் வாள் வீசினாலும் அவைகள் ஆண்டவன் அருளாலும், எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆன்மாக்களின் ஆசியினாலும் அனைத்தும் தூள்தூளாகி விடும்.

எலியாக மாறிவிட்டது

புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்தப்படும் என்று அறிவித்த அம்மாவின் ஆணைப்படி தற்போது பல மாவட்டங்களில் நடைபெற்று தற்போது தேனி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. 1967ல் அண்ணாவின் தலைமையில் தி.மு.க ஆட்சி நடைபெற்று வந்தது. 1969ல் அண்ணா மறைவிற்கு பின் யார் முதல்வராக பொறுப்பேற்பது என்று எதிர்பார்த்தபோது எல்லோருடைய எண்ணமும் புரட்சித்தலைவர் மீது இருந்தது. ஆனால் நல்லாட்சி நடத்துவார் என்ற நம்பிக்கையில் கருணாநிதியை முதல்வராக்கினர். ஆனால் கருணாநிதி தி.மு.கவை  குடும்ப சொத்தா மாற்றிவிட்டார். அப்போது புலியாக இருந்த தி.மு.க எம்.ஜி.ஆர் விலகி அ.தி.மு.கவை உருவாக்கிய பின் எலியாக மாறிவிட்டது.

பல திட்டங்கள் அறிவிப்பு

எம்.ஜி.ஆர் தனது ஆட்சியில் சத்துணவு திட்டம், முதியோர் பென்சன் உள்ளிட்ட பல தன்னிறைவு திட்டங்களை கொண்டு வந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் கழகத்தை கட்டிக்காத்த அம்மா, அரசியல் புரட்சியால் வறுமையை ஒழித்தல், புனித யாத்திரை செல்ல மும்மதத்தினருக்கும் சலுகைகள், ரம்ஜான் மாத நோன்புக்காக  பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி, ஏழை எளியோரின் பசியை போக்க அம்மா உணவகம் அமைத்தல், ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த கறவைமாடுகள் வழங்குதல் என பல எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்.

27 ஆண்டுகள்

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர் சிலை அமைத்தல், 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வரும் முல்லை பெரியார் அணையை கட்டிய கர்னல் ஜான்பென்னிகுயிகிற்கு  மணிமண்டபம் அமைத்தல், முல்லைபெரியார் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து சட்ட போராட்டம் செய்து 142 அடியாக உயர்த்தியது என அம்மாவின் தன்னலமற்ற ஆட்சியால் 16 லட்சம் உறுப்பினர்களாக இருந்த அ.தி.மு.க ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட எஃகு கோட்டையாக மாறியது. மேலும் அ.தி.மு.க உருவானதிலிருந்து இதுவரை தமிழக மக்களின் பேராதரவோடு 27 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து வருகிறது.

தூக்கமில்லை

அவருடைய மறைவுக்கு பின் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவது சிலருக்கு தாங்கமுடியவில்லை, சிலருக்கு தூக்கமில்லை ஆட்சியை கலைத்து விடலாம் என்று நினைத்தவர்களின் கணக்கு தப்பாகிவிட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றார். பசும்பொன் தேவரின் உருவசிலைக்கு அணிவிக்க தங்க கவசத்தை பெற பிரச்னை செய்தனர். அதனால் அவற்றை மாவட்ட ஆட்சியர் மூலம் அணிவிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் விரைவில் நமக்கு கிடைத்து விடும் என்றார்.

குட்டிக்கதை

ஒரு முனிவரிடம் ஒருவர் வந்தார். தனது பாவத்தை போக்க வழி சொல்லுமாறு கேட்டார். முனிவர் என்ன பாவம் செய்தாய் என்று கேட்டார்.  தான் நிறைய அவதூறு பேசுவதாக கூறினார். உடனே முனிவர் உன் வீட்டில் தலையணை இருந்தால் எடுத்துவந்து நடுவீதியில் நின்று கொண்டு உள்ளிருக்கும் பஞ்சை எடுத்து பறக்கவிட்டு விட்டு வா என்றார். குழம்பியவர் முனிவர் சொன்னமாதிரி செய்து விட்டு வந்து தன் பாவம் தீர்ந்து விட்டதா என்று ஆர்வமாக கேட்டார். முனிவர் நான் பஞ்சை பறக்க விட்டால் பாவம் தீர்ந்து விடும் என்று சொல்லவில்லையே என்றும், தற்போது பறக்கவிட்ட பஞ்சை மீண்டும் ஒன்று சேர்த்து கொண்டு வா என்றார். நாலாபக்கமும் பறந்து போன பஞ்சை எப்படி கொண்டு வர முடியும் என்று வந்தவர் கேட்க, அதுபோல உன் பாவமும் தீராது என்று முனிவர் தெரிவித்தார். இது யாருக்காக கூறுகிறேன் என்று அனைவருக்கும் தெரியும் என்றார்.   இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து