முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்

சனிக்கிழமை, 11 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

வியட்நாம்: வியட்நாமில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டுறவு உச்சி மாநாட்டை முன்னிட்டு சி.இ.ஓ.க்கள் மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டிப் பேசினார்.

“இந்தியா 130 கோடி மக்கள் தொகை கொண்ட இறையாண்மை பொருந்திய தேசம், உலகிலேயெ பெரிய ஜனநாயக நாடு. பொருளாதாரத்தை தாராளமயப்படுத்தியவுடன் இந்தியா அதிர்ச்சியடையக்கத் தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்நாட்டின் விரிவாக்கம் பெறும் நடுத்தர மக்களுக்கு புதிய வாய்ப்புகள் திறந்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி பரந்து விரிந்த இந்தியாவையும் அதன் மக்களையும் ஒருங்கிணைக்க பணியாற்றி வருகிறார். இதில் அவர் வெற்றியும் பெற்று வருகிறார்” என்று புகழ்ந்து பேசினார்.

மேலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளையும் பாராட்டினார். வியட்நாமைக் குறிப்பிட்டு இன்று நாம் எதிரிகள் அல்ல நாம் நண்பர்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து