இலவச தையல் பயிற்சி துவக்க விழா

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      காஞ்சிபுரம்
kanchipuram 2017 11 21

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூந்து நிலையம் அருகே உள்ள வீரராகவன் கல்வியியல் அறக்கட்டளையில் பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கும் பிரதான் மந்திரி கௌசல்ய விகாஷ் யோஜனா திட்டத்தின் மூலம் தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது.

 நிர்வாகிகள்

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவனர் வீ.அரிபாலாஜி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பயிற்சியினை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் டி.ஜீவானந்தம், தென்னேரி வரதராஜீலு, அக்ரி நாகராஜன், விவசாய பிரிவு பழனி, பேரூராட்சி செயலாளர் ராஜேந்திரன், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து