முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.581.65 கோடி மதிப்பிலான அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கம்

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2026      இந்தியா
Anil-Ambani 2024-08-23

புதுடெல்லி, கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான நிலங்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்எச்எப்எல்), ரிலையன்ஸ் வர்த்தக நிதி நிறுவனம் (ஆர்சிஎப்எல்) ஆகியவை ரூ.11,000 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை என யெஸ் வங்கி, இந்திய யூனியன் வங்கி, மகாராஷ்டிரா வங்கி ஆகியவை புகார் அளித்தன.

இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அமலாக்கத் துறை கடந்த 6ம் தேதி பல இடங்களில் சோதனை நடத்தியது. இதில் முறைகேடு உறுதியானதை அடுத்து கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான நிலங்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் ரூ.16,310 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து