முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்தக்கோரி தன்னாட்சி உயர்கல்வி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      புதுச்சேரி

 மத்திய அரசு கடந்த 1.1.2016 முதல் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்தி உள்ளது.

தர்ணா போராட்டம்

புதுவையில் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நிலுவைத் தொகையும், அகவிலைப்படியும் வழங்கப்பட வில்லை. இதனால்அரசு ஊழியர்கள் இந்த நிலுவைத் தொகையும் வழங்க கோரி அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில்  புதுவை மாநில அரசு தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று போராட்டம் நடத்தினர். 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை 1.1.2016 முதல்அமல் படுத்த வேண்டும். தன்னாட்சி உயர் கல்வி நிறுவனங்களை அரசு கல்லூரியாக மாற்றம் செய்ய வேண்டும். பிரதி மாதம் சம்பளத்தை உரிய தேதியில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, மதர் தெரசா அரசு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் செவிலியர் கல்லூரி, தாகூர் அரசு கலைக்கல்லூரி, ராஜீவ்காந்தி அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகளை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் கல்லூரி நுழைவு வாயிலை மூடி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்கள் கல்லூரிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சில கல்லூரிகளில் மாணவர்களும், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து