முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம் கூடுவது எப்போது ?

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நவம்பர் 3வது வாரத்தில் தொடங்கும். இமாச்சல பிரதேசம், குஜராத்தில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தைக் கூட்ட பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று கூடியது. இதில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி ஜனவரி 5-ம் வரை நடத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து