முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி: ஆஸ்திரேலிய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

வியன்னா :  ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள ஆஸ்திரேலிய சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அதற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஓரின சேர்க்கை ஜோடி ஆஸ்திரேலியாவின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த கோர்ட் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றிய பிறகு 2018 டிசம்பரில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. உலகிலேயே நெதர்லாந்து தான் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளித்திருந்தது.

தொடர்ந்து பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 15 ஐரோப்பிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்கேரியா, போலந்து, ருமேனியா, சுலோவாக்கியா உள்ளிட்ட நாடுகள் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து