கரூரில் நடைபெற்ற பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி : கலெக்டர் தொடங்கி வைத்து ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      கரூர்
karur 2017 12 08

கரூர் , திருமாநிலையூர் பெருமாள்கோவில் அருகில் உள்ள அமராவதி ஆற்றங்கரையில் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் வடகிழக்கு பருவமழை 2017 மாதிரி ஒத்திகைப் பயிற்சியினை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் நேற்று 08.12.2017 பயிற்சியினை தொடங்கி வைத்து ஆலோசனை வழங்கினார்.

ஒத்திகை

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களை காப்பாற்றும் முறைகள் தீ தடுப்பு பணிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை முறைகள் குறித்து ஒத்திகைளை தீயணைப்பு துறையில் செய்து காட்டி செயல்விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட கலெக்டர் தெரிவித்தாவது, மழை வெல்லம் , தீ போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றுவதில் வருவாய் நிர்வாகத்தோடு இனைந்து பணியாற்றுவதில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மிகுந்த பங்கு வகிக்கிறது.

இத்தகைய சேவை பணிகளை பொதுமக்கள் பயன்படுத்தி பேரிடர் காலங்களில் சேதங்களை தவிர்த்து பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி(கரூர்) பாலசுப்பிரமணியன்(குளித்தலை) மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் அப்துல்பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து