முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பந்தில் பேரூந்துகளை சேதப்படுத்திய 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பந்தில் பேரூந்துகளை சேதப்படுத்திய 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒகி புயல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலில் தாக்குதலில் பலத்த சேதம் ஏற்ப்பட்டது. 10 ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட பண பயிர்களான ரப்பர்.,வாழை போன்ற மரங்கள் சேதமடைந்தன. மரங்கள் விழுந்ததில் 35 பேர் மரணமடைந்தனர். அதே நேரம் கடலில் மீன்  பிடிக்க சென்ற மீணவர்கள் 543 பேரை காணவில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் இறந்து போன மீணவர்களுக்கு தலா ரூ 25 லட்சம்  நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதே நேரம் புயல் தாக்குதலில் மரம் விழுந்து இறந்து போன விவசாயிகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் மீணவர்களுக்கு வழங்குவது போல விவசாயிகளுக்கும் தலா 25 லட்சம் வழங்க வேண்டுமென கேட்டு விவசாயிகள் பந்த் மேற்கொண்டனர். இதில்  34 பேரூந்துகள் கல் வீச்சியில் சேதமடைந்தன. இது தொடர்பாக 46 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் 34 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏனைய 13 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து