செங்கோட்டை நூலகத்தில் கவிதை பூக்கள் நூல் வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      திருநெல்வேலி
book launch

செங்கோட்டை முழுநேர நூலகம் எஸ்.ஆர்.ரெங்கநாதன் கூட்ட அரங்கில் வைத்து நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  என்சிசி ஆசிரியராக பணிபுரிந்து வரும் பன்னாட்டு தமிழ் ஆய்வாளர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் முதலாவதாக எழுதிய கவிதை பூக்கள், மெய்வாய் மொழி எனும் நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.

நூல்கள் வெளியீட்டு விழா

விழாவிற்கு வாசகர் வட்டத்தலைவர் இராமகிருஷ்ணன் தலைமைதாங்கினார். எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பன்னீர்செல்வம், குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியர் முனைவர் மகேஸ்வரி, எஸ்எஸ்ஏ.திட்ட அலுவலர் இராஜேந்திரன், ஆகியோர் முன்னிலைவகித்தனர். வாசகர் வட்ட இணைச்செயலாளர் செண்பக்குற்றாலம் அனைவரையும் வரவேற்று பேசினார். வாசகர் வட்டச்செயலாளர் நல்நூலகர் இராமசாமி தொகுப்புரையாற்றினார். பள்ளி மாணவர் மனீஸ் இறைவணக்கம் பாடினார். அதனைதொடாந்து பன்னாட்டு தமிழ் ஆய்வாளர்  தண்டமிழ்தாசன் பா.சுதாகர் எழுதிய கவிதைப் பூக்கள், மெய்வாய்மொழி ஆகிய நூல்களை சாகித்திய அகாடமி விருது பெற்ற நூலாசிரியர் குறிஞ்சிச் செல்வர் முனைவர் கோ.ம.கோதண்டம் வெளியிட்டார். முதல் பிரதியை ஆன்மீக கட்டுரையாளர் மற்றும் 40 நூல் எழுதிய நாவலர் முத்தாலங்குறிச்சி காமராசு பெற்றுக்கொண்டார். அதனைதொடர்ந்து நூலகத்தில் நடந்த நூல் திறனாய்வு போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு புளியங்குடி மனோ கல்லூரி முதல்வர் முனைவர் வேலம்மாள் பரிசுகள் வழங்கினார். பின்னர் மாவட்ட கல்வி அலுவலர் சுடலை, செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் ரத்னபெத்முருகன், கவிஞர் நல்லைகணேசன், எழுத்தாளர் கடிகைஅருள்ராஜ், பணிநிறைவு பெற்ற ஆசிரியர் பொன்.சொர்ணவேல், நல்லாசிரியர் சிவசுப்பிரமணியன், செண்பக்கண்ணு, விழுதுகள் அறக்கட்டளை சேகர், ஆனந்தராஜ் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் பன்னாட்டு தமிழ் ஆய்வாளர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து