துறையூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் : கலெக்டர் கு.ராசாமணி. நேரில் பார்வையிட்டு ஆய்வு

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      திருச்சி
Trichy 2017 12 21

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

ஆய்விற்கு பிறகு மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: துறையூர் நகராட்சியில் 24 வார்டுகளிலும் தினசரி சேகரமாகும் 15 மெ.டன் திடக்கழிவுகளை முதல் நிலை சேகரிப்பு பணி வீடுவிடாக, துப்புரவு பணியாளர்களை கொண்டு, குப்பைகள் சேகரிக்கப்பட்டு, 200 லிட்டர் கொள்ளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரம் செய்யப்பட்டு 3 லாரிகள் மூலம் தினசரி நகராட்சி உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. நகரில் உள்ள வீடுகளிலும் கழிவுகளை தரம் பிரித்து மக்கும் மக்கா குப்பைகளாக தரம் பிரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

100 கிலோவிற்கு மேல் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களை தங்களது சொந்த பொறுப்பில் அப்புறப்படுத்த உரிய நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களை அழைத்து 51 மைக்ரான் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களும் 31.12.2017க்குள் 51 மைக்ரான் பிளாஸ்டிக் உபயோகப்படுத்த உறுதி எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  மேலும் இந்நகராட்சியில் 23 சமுதாய கழிப்பிடம் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் உள்ளது.

இதில் 15 கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள கழிப்பிடங்கள் மராமத்து மற்றும் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. துறையூர் நகராட்சிக்கு சொந்தமான சொரத்தூர் சாலை பழைய உரக்கிடங்கில் உள்ள குப்பைகளை ரூபாய் 165 இலட்சம் மதிப்பில் டீழை ஆiniபெ முறையில் பிரித்தெடுத்து உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

முன்னதாக துறையூர், உழவர் சந்தை, ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, நியாயவிலைக் கடை ஆகிய பகுதிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். துறையூர் பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்து நில ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். அய்வின் போது முசிறி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சிதுறை, நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து