இந்தியா, ரஷ்யா, சீனாவுடன் சேர்ந்து பணிபுரிவது நல்ல விஷயம்: டிரம்ப்

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      உலகம்
trump 2017 10 12

வாஷிங்டன், இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன்  சேர்ந்து பணிபுரிவது நல்லதுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்வுடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற டிரம்ப் நேற்று கூறியபோது,

இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன்  சேர்ந்து பணிபுரிவது நல்ல விஷயம்தான். கெட்ட விஷயம் அல்ல. சக்தி வாய்ந்த ராணுவம், எண்ணெய் வளம் ஆற்றலை பெற்றிருக்கிறேன். ஆனால் முன்பு இருந்த அரசு அத்தகைய ராணுவத்தை கொண்டிருக்கவில்லை.


நாங்கள் உலகில் பல நாடுகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம். பிற நாடுகளுடன் நட்புறவை நன்றாக பேணி வருகிறோம் என்று நினைக்கிறேன். நான் தென்கொரிய அதிபர் மூன்னுடன் இரு நாட்டு உறவுக் குறித்து காலையில் கூட பேசினேன். நிறைய நன்மைகள் நடைபெற இருக்கின்றன. என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார்.

முன்னதாக வடகொரியா - தென் கொரியா இடையே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பேச்சு வார்த்தை ஏற்பட அமெரிக்கா அதிபர் டிரம்ப் பெரிதும் உதவினார் என்று தென் கொரிய அதிபர் மூன் டிரம்ப்பை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து