இஸ்ரோ தலைவராக தமிழர் நியமனம்: ஸ்டாலின் வாழ்த்து

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      தமிழகம்
mkstalin 2017 12 31

சென்னை : இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக விஞ்ஞானி கே. சிவனுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்  கே.சிவன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை அடுத்தகட்ட வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லுவார், அவருடைய முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். - மு.க. ஸ்டாலின்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவைக் குழு அளித்துள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன், தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பதவி வகித்து வருகிறார்.

இது குறித்து ஸ்டாலின், தனது டுவிட்டர் பதிவில்,


இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்  கே.சிவனுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை அடுத்தகட்ட வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் அவருடைய முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து