முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெள்ளானந்தல் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை அடுத்த தெள்ளானந்தல் கிராமத்தில் நேற்று நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 20 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி வழங்கினார். திருவண்ணாமலை வட்டம் மங்கலம் உள்வட்டத்துக்கு உள்பட்ட தெள்ளானந்தல் கிராமத்தில் சிறப்பு அம்மா திட்ட முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம், கால்நடை முகாம் ஆகிய நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். தாசில்தார் ஆர்.ரவி அனைவரையும் வரவேற்று பேசினார்.

நலத்திட்ட உதவி

சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் இரா.முருகன், மண்டல துணை தாசில்தார் அமுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து 35 மனுக்கள் பெறப்பட்டன. சிறுகுறு விவசாய சான்று 19 பேருக்கும் பட்டா மாறுதல் சான்று ஒருவருக்கும் மொத்தம் 20 பயனாளிகளுக்கு முகாமில் நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி வழங்கினார். இந்த முகாமையட்டி கால்நடை துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. இதில் 25 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இதேபோல கண் சிகிச்சை முகாமில் 20 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) சுசிலா, தனி வருவாய் ஆய்வாளர் க.விஜயரங்கன், வள்ளிவாகை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் வி.ராஜவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் கே.காமேஷ்குமார், ஏ.அன்பழகன், திருமலை உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் வி.பாலசந்திரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து