முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்மீக நகரமாக விளங்கும் தி.மலை விரைவில் தொழில் நகரமாக மாற வாய்ப்பு: அமைச்சர் மாபா.பாண்டியராஜன் பேச்சு

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      திருவண்ணாமலை
Image Unavailable

ஆன்மீக நகரமாக விளங்கும் திருவண்ணாமலை விரைவில் தொழில்நகரமாக மாற வாய்ப்புள்ளது என்று திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மாஃபா. க.பாண்டியராஜன் கூறினார்.

தொழில் நகரம்

 

தமிழகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இந்தி மொழியை கட்டயமாக திணித்தபோது, அதனை எதிர்த்து தமிழ்மொழிக்காக சிறைசென்று தங்களுடைய இன்னுயிரை விட்ட இளைஞர்கள் தாளமுத்து, நடராசன், விருகம்பாக்கம் அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், கீழ்பாவூர் சின்னசாமி, சிவகங்கை ராஜேந்திரன், விராலிமலை சண்முகம் உள்ளிட்ட 63 மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் தி.மலை திருவள்ளுவர் சிலை அருகில் மொழிப்போர் தியாகிகளுக்காக வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பீரங்கி ஜெ.வெங்கடேசன் தலைமைதாங்கினார். மாவட்ட மாணவரணி இணை செயலாளர் கே.உஷாநாதன் அனைவரையும் வரவேற்க, இணை செயலாளர் கே.குட்டிகணேசன் துவக்கவுரையாற்றினார். இதில் தலைமை கழக பேச்சாளர் நடிகர் தியாகு, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா. க.பாண்டியராஜன் பேசுகையில்,திருவண்ணாமலை ஆன்மீக நகரமாக விளங்குகிறது. இந்த நகரம் விரைவில் தொழில் நகரமாக வாய்ப்புள்ளது. தமிழ் உயர்ந்ததுபோல் திருவண்ணாமலையும் வளர்ச்சியில் உயரவேண்டும். முழுக்க முழுக்க விவசாயம் நிறைந்த மாவட்டமாக விளங்கும் திருவண்ணாமலை மாவட்டம் மாநிலத்திலேயே வளர்ச்சியில் முதன்மை மாவட்டமாக திகழவேண்டும். எளிதில் மக்களின் கோரிக்கைகளை உள்வாங்கி முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் இருதலைவர்களும் அம்மாவைப்போல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி தொடர வேண்டும் மக்கள் விரும்புகிறார்கள்.

மானியவிலையில் ஸ்கூட்டர்

ரூ. 650 கோடியில் புதிய திட்டம் வரவுள்ளது. இதன்மூலம் மகளிர் குழுவினர் மற்றும் விவசாயிகள் அரசின் பங்குதாரர்களாக மாறும் நிலைவரும். இவர்கள் அதிபர்களாகவும் மாற வாய்ப்பை இந்த அரசு ஏற்படுத்தி தரவுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வரவாய்ப்புள்ளது. மறைந்த முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ந் தேதி மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டமும் இதேபோல் அம்மா மறுமலர்ச்சி திட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனால் ஏழை எளிய நடுத்தரப்பட்ட மக்கள் இத்திட்டம் மூலம் பொருளாதாரத்தில் உயர வாய்ப்புள்ளது என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் அன்பழகன், மாவட்ட கழக பொருளாளர் எம்.எஸ்.நைனாகண்ணு, நகர செயலாளர் ஜெ.செல்வம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராயணன், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் வட்ட கழக நிர்வாகிகள் அணி சார்பு நிர்வாகிகள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி பொருளாளர் கே.கே.செல்வம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பீரங்கி ஜெ.வெங்கடேசன் செய்திருந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து