முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் வரை அமெரிக்காவின் சண்டை தொடரும்: அதிபர் டிரம்பின் ஆவேச உரை

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயார். ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒழிக்கப்படும் வரை அமெரிக்காவின் சண்டை தொடரும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் (ஸ்டேட் ஆப் தி யூனியன்) அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக நேற்று உரையாற்றினார். கேபிட்டால் ஹில் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் கூறியதாவது:

அமெரிக்கர்கள் தங்கள் கனவு வாழ்வைத் தொடங்குவதற்கு இதை விட சிறந்த நேரம் இல்லை. அமெரிக்காவின் பாதுகாப்பு, வலிமை, பெருமையை எனது தலைமையிலான நிர்வாகம் உருவாக்கி வருகிறது. இந்த நேரத்தில் ஆளும் குடியரசுக் கட்சி என்றும் எதிர்க்கட்சி ஜனநாயகக் கட்சி கட்சி என்றும் அமெரிக்கர்கள் வேறுபாடு பார்க்கக் கூடாது. பொதுவான அடிப்படையில் மக்களுக்காக நாம் இணைந்து பணியாற்ற ஒன்றுபட வேண்டும்.

கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி நான் அதிபராகப் பதவியேற்ற பிறகு மிகப்பெரிய முன்னேற்றங்களை அமெரிக்காவில் ஏற்படுத்தி உள்ளேன். அமெரிக்க பொருளாதாரம் உயர்ந்துள்ளது. சிரியா, இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுவிட்டன. எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் முழுமை யாக ஒழித்துக் கட்டப்படும் வரை அமெரிக்காவின் போர் தொட ரும்.
தீவிவாதிகளைக் கைது செய்ய வேண்டும். இந்தச் சூழ்நிலையில் குவாண்டனாமோ பகுதி யில் உள்ள சிறை தொடர்ந்து செயல்படும். (இந்தச் சிறை மூடப்படும் என்று முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.)
அமெரிக்காவின் பாதுகாப்பை முன்னிட்டு நம்முடைய அணு ஆயுதங்களை நவீனப்படுத்த வேண்டும். இரானில் ஊழல் தலைவர்களுக்கு எதிராக குற்றங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும்போது, மக்கள் பக்கம் அமெரிக்கா இருக்கும். ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள குறைகளைக் களைய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும்.

தகுதி அடிப்படையில் குடியுரிமை

வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேற தகுதி அடிப்படையில் அனுமதிக்கும் முறைக்கு மாற வேண்டிய தருணம் வந்துள்ளது. அதாவது திறமையான (தொழில்நுட்ப) ஊழியர்கள், இங்கு பணியாற்ற விரும்புகிறவர்கள், நம் நாட்டுக்கு பங்களிப்பை அளிக்கக் கூடியவர்கள், நாட்டை நேசித்து மதிக்கக் கூடியவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இனி குடியுரிமை வழங்கப்படும். இவ்வாறு  அதிபர் டிரம்ப் பேசினார்.

அதிபர் டிரம்ப் தனது உரையின் போது, இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரித்தது, ஆப்கனில் எடுத்து வரும் நடவடிக்கை கள் சரியானவைதான் என்று மீண்டும் உறுதியாகக் கூறினார். வடகொரியா சொந்த மக்களை அச்சுறுத்தி அடக்கி வைத்துள்ளதாகவும், அமெரிக்கா உட்பட உலகுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

மேலும், நாம் வாழும் உலகை சுற்றி ஆபத்தான நாடுகளையும், தீவிரவாத குழுக்களையும், அமெரிக்காவின் விருப்பங்கள், கொள்கைகளுக்கு சவாலாக சீனா, ரஷ்யா போன்ற நாடு களையும் கொண்டுள்ளோம். எனினும் அமெரிக்காவின் பாதுகாப்பு, வலிமை, பெருமையை நிலைநாட்டுவேன் என்று டிரம்ப் கூறினார். அவர் ஒரு மணி 20 நிமிடங்கள் பேசினார். இந்நிகழ்ச்சியில் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப் உட்பட முக்கிய பிரமுகர் கள் பலர் பங்கேற்றனர். டிரம்ப் உரையை 4 கோடி அமெரிக்கர்கள் தொலைக்காட்சிகளில் பார்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து