முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம் 5ம் தேதி வரை ஒத்திவைப்பு: மகாஜன்

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: 2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய பொது பட்ஜெட் உரையை நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி நிறைவு செய்ததையடுத்து பாராளுமன்றத்தை வரும் 5ம் தேதி திங்கட்கிழமை வரை ஒத்தி வைத்தார் அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்.

2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றத் தொடங்கிய அருண் ஜெட்லி, ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார். கிசான் கடன் அட்டை திட்டம், மீனவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும், புதிய மருத்துவக் கல்லூரிகள் போன்ற பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன. அதே சமயம், தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக இருக்கும் அதே நிலை தொடரும் என்று அறிவித்தது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அதே போல, ரயில்வே துறைக்கான அறிவிப்பில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பெட்ரோல், டீசல் வரி விதிப்பு, முதியோர் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையில் மாற்றம் என பல எதிர்பார்ப்புகள் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து