முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

49-வது நினைவு தினம்: அண்ணா நினைவிடத்தில் இன்று ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: அண்ணா நினைவு நாளையொட்டி இன்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மலர்வளையம் வைத்து...
அண்ணாவின் 49-வது ஆண்டு நினைவு நாளான இன்று காலை 10.30 மணி அளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில், அ. தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

நிர்வாகிகள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ.,பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.

பிற மாநிலங்களிலும்...
தமிழ்நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், இன்று ஆங்காங்கே அண்ணாவினுடைய சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து