முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசாயன ஆயுதங்களை தயாரித்து வரும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை? அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை

சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: புதிய வகை ரசாயன ஆயுதங்களை தயாரித்து வரும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக, அமெரிக்க அரசின் உயரதிகாரி ஒருவர் செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது:
அமெரிக்காவின் தலையீட்டின்பேரில், சிரியா தன் வசமிருந்த அதிபயங்கர ரசாயன ஆயுதங்களைக் கடந்த 2014-ம் ஆண்டு அழித்தது. ஆனால், சிரியாவில் சமீபகாலமாக நடைபெற்று வரும் ராணுவத் தாக்குதல்களானது, அந்நாடு புதிய வகையான ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், உளவுத் தகவல்களும் இதனை உறுதிப்படுத்துவ தாகவே அமைந்துள்ளன.

இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தேவைப்பட்டால், இந்த விவகாரம் தொடர்பாக சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். ரசாயன ஆயுதங்களைத் தடுக்கும் பொருட்டு, ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமெரிக்காவுக்கு உரிமை உள்ளது.

இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. குறிப்பாக, சிரியாவின் நெருங்கிய கூட்டாளியாக திகழும் ரஷ்யா, இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், சர்வதேச சமூகம் அலட்சியம் காட்டினால், சிரியாவிலிருந்து எல்லைத் தாண்டி ரசாயன ஆயுதங்கள் பரவும் அபாயம் ஏற்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், சிரியா அரசாங்கத்துக்கும் இடையே பெரிய அளவிலான உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.  இந்தப் போரின்போது, தீவிரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில், சிரிய ராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பிரயோகித்ததாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, சிரியாவிடமிருந்து ஏராளமான ரசாயன ஆயுதங்களைப் பறிமுதல் செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து