முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,548 கோடி நிதி ஒதுக்கீடு

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, இரட்டை வழிபாதை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழக திட்டங்களுக்கு...

2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். இதில் ரயில்வே துறைக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 528 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒசூர் – பெங்களூரு இடையிலான 48 கிலோ மீட்டர் தூர இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கான 376 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உ.பி.க்கு அதிகபட்ச...

மேலும் தமிழகத்தில் 20 ஆயிரத்து 64 கோடி ரூபாய் மதிப்பிலான 27 ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதில் 3,198 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையும் அடங்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சமாக, உத்தரப்பிரதேச மாநில ரயில்வே திட்டங்களுக்கு 7,685 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து