ஆதாருடன் ஓட்டுநர் உரிமங்களை இணைக்க மத்திய அரசு முடிவு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      இந்தியா
Aadhaar card

புது டெல்லி, ஓட்டுநர் உரிமங்களை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பான மென்பொருள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சாலைப் பாதுகாப்பு தொடர் பான பரிந்துரைகளை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்தது. மேலும், சாலைப் பாதுகாப்பு தொடர்பாக சில உத்தரவுகளையும் மாநில அரசுகளுக்கு பிறப்பித்தது.

இக்குழு சுப்ரீம் கோர்ட்டில் முதல்கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், ஓட்டுநர் உரிமங்களை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பான மென்பொருள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆதார் திட்டம் செல்லத்தக்கதுதானா என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வரும் நிலையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து