முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு: இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. 

இலங்கையில், 24 நகராட்சி கவுன்சில்கள், 41 ஊரக கவுன்சில்கள், 275 பிரதேசிய சபாக்கள் என பல்வேறு உள்ளாட்சி அமைப்பகளுக்கும் நேற்று ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது.பல பகுதிகளிலும் மக்கள் விறுவிறுப்புடன் வாக்களித்து வருகின்றனர். தமிழர் வாழும் பகுதியிலும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

மொத்தம் 1.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதையொட்டி அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 65 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முப்படையை சேர்ந்த 900 வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தேர்தலில், 25 சதவீத இடங்கள் மகளிருக்காக முதல் முறையாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிபர் சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியும், ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிடுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து