முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரியில் சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழி குழு ஆய்வுக்கூட்டம்தலைவர்சி.ராஜா தலைமையில் தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரியில் சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழி குழு தலைவர்சி.ராஜா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்றுநடைபெற்றது.ஆய்வு கூட்டத்தில் கலெக்டர்சி.கதிரவன் அனைவரையும் வரவேற்றார்.அரசு உறுதிமொழிக் குழுவின் உறுப்பினர்கள் கோயம்முத்தூர் (வடக்கு) சட்ட மன்ற உறுப்பினர்பி.ஆ.ஜி.அருண்குமார், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்.சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற உறுப்பினர்சு.குணசேகரன், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகிய உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைமை செயலகம் இணைச் செயலாளர்.பா சுப்பிரமணியம், சார்புச் செயலாளர்.த.சுஜாதா ஆகியோர் முன்னிலையில் உறுதி மொழிக்குழு மனுக்களுக்கு பதில் தரக்கூடிய சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

உறுதிமொழிகுழு

தமிழ்நாடு சட்டப் பேரவை - அரசு உறுதி மொழிக்குழு தலைவர்சி.ராஜா ஆய்வுக் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசும் பொழுது:15-வது சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு (2016 - 18 ஆண்டுக்கான) 9 - சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று ( 14.02.2018 ) ஆய்வு நடத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டமானது வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும், இங்கு தலைநகரத்தில் சையத் பாஷா கோட்டை, இராயக்கோட்டை, குட்டி இங்கிலாந்திற்கு பெயர் பெற்ற ஓசூர் அருகேயுள்ள தளி நகரமாகும், இங்கு ஏராளமான மலை குன்றுகளை அமையப் பெற்றுள்ளது. அதே போல் ஓசூர் என்றால் புதிய நகர் என்று பொருள். இங்கு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில், மூதறிஞர் இராஜாஜி நினைவகம் , கே.ஆர்.பி அணை ஆகியவை உள்ளது.சட்ட பேரவை அரசு உறுதிமொழிக்குழுவின் மூலம் ஆய்வு செய்து மக்களின் நலனுக்காக தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

மது விலக்கு (ம) ஆய்த்தீர்வை துறை, நெடுஞ்சாலைகள் துறை, கூட்டுறவுத் துறை, பிற்படுத்தபட்டோர், கால்நடை பாராமரிப்புத்துறை , சுற்றாலத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, போக்குவரத்து துறை, வனத்துறை, மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை, விளையாட்டு மேம்பாட்;டுத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட 16 - துறைகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் துறைரீதியான சார்பு நீதி மன்றதிற்கு சொந்த கட்டிங்கள் கட்டுவது, புறவழிச்சாலைகளில் சாத்திய கூறுகள் உள்ள இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைத்தல், பகுதி நேர நியாவிலைக்கடைகள் அமைத்தல், மாணவர்களுக்கு விடுதி கட்டிடம் கட்டுதல், மலைக் கிராமங்களில் கால்நடை கிளை மருந்தகம் அமைத்தல், திருக்கோயில்களுக்கு அடிப்படை வசதி செயதல், குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் தடுப்பனைகள் கட்டுதல், குடிநீர் வசதி, ஊத்தங்கரை பகுதிக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க நடவடிக்கை , வனப்பகுதியில் தார்சாலை அமைத்தல், தாய் செய் நல விடுதி மேம்படுத்தல், ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தல், பாசண கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளின் தன்மை குறித்தும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றும் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களை அனுகியும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நிலுவை பணிகளை விரந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்ட பேரவை அரசு உறுதி மொழிக்குழு தலைவர் வலியுறுதினார்.

 

நேரில் ஆய்வு

தொடர்ந்து கிருஷ்ணகிரியில் எரிசக்தித்துறையின் சார்பில் ரூ.4.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தையும், இராயக்கோட்டையில் வேளாண்மைத் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் ரூ.10.61 கோடி மதிப்பில் தக்காளி குளிர்பதன சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணிகளையும், சூளகிரி பேருந்து நிலையத்தில் விரிவாக்கம் குறித்தும், செய்யப்படவேண்டிய வசதிகள் குறித்து பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் கேட்டறிந்தனர்.

இவ்வாய்வுக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்.டி.செங்குட்டுவன், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்.சி.வி.இராஜேந்திரன், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர்பி.முருகன், திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சித்துறைநரசிம்மன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து