முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனோகர் பாரிக்கர் உடல்நலம் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளருக்கு கோவா சட்டசபையில் நுழைய தடை

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

கோவா, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலம் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் நேற்று சட்டப்பேரவையில் செய்தி சேகரிக்க முயன்றபோது, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் இருந்து வருகிறார். கடந்த 15-ம் தேதி அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு, கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்பதால், அவரை மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு அனுப்ப பரிந்துரைத்தனர். இதையடுத்து, மனோகர் பாரிக்கர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதல்வர் மனோகர் பாரிக்கரை மருத்துவமனைக்கு நேரில் சென்று, நேற்று பிரதமர் மோடி உடல் நலம் விசாரித்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஆளுநர் வித்தியாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் , பாஜக செய்தித் தொடர்பாளர் சதாலே உள்ளிட்டோரும் நலம் விசாரித்தனர்.

இதற்கிடையே மனோகர் பாரிக்கர் உடல் நலம் குறித்து முதன்முதலில் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் நேற்று கோவா சட்டப்பேரவைக்கு செய்தி சேகரிக்க வந்தார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கோவாஜங்ஷன்.காம் என்ற இணையதளத்தை ஹரிஸ் வோல்வோய்கர் நடத்தி வருகிறார். அவர் நேற்று சட்டப்பேரவைக்கு வந்த போது அனுமதி மறுக்கப்பட்டது.

இது குறித்து வோல்வோய்க்கர் நிருபர்களிடம் பனாஜியில் கூறுகையில், “ நான் இன்று சட்டப்பேரவைக்கு செய்தி சேகரிக்கச் சென்றேன். ஆனால், என்னை வளாகத்துக்குள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. சட்டப்பேரவைக்குள் நுழைய எனக்கு அனுமதி பாஸ் இருந்தும் எனக்கு தடை விதிக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

இது குறித்து கோவா மாநில சபாநாயகர் பிரமோத் சாவந்தின் சிறப்பு அதிகாரி ஆத்மராம் பார்வேயிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, "வோல்வோய்கரை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க யாரும் தடை செய்யவில்லை. இது குறித்து சபாநாயகருடன் கலந்து பேசுகிறேன்” என்று தெரிவித்தார்.

ஆனால், மனோகர் பாரிக்கர் உடல் நிலை குறித்து முதன்முதலில் வோல்வோய்கர் இணையதளம்தான் செய்தி வெளியிட்டதால், அவருக்கு தடைவிதிக்கப்படுகிறது என்று ஊடகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து