பிஎப் வட்டி 8.55% ஆக குறைப்பு

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      வர்த்தகம்
epf 2018 02 14

தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக பிஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இபிஎஃப் அமைப்பு கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து, தனது முதலீட்டில் ஒரு பகுதியை ஈடிஎஃப் எனப்படும் பங்கு பரிவர்த்தனை நிதியில் முதலீடு செய்து வருகிறது. இதில் இதுவரை சுமார் ரூ.44,000 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இபிஎஃப் அமைப்பு சமீபத்தில் பங்கு பரிவர்த்தனை நிதியின் ஒரு பகுதியை விற்றது. இதன்மூலம் ரூ.1,054 கோடி கிடைத்தது. இதனால் 2017-18 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதங்களில் மாற்றமிருக்காது எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் முந்தைய ஆண்டு வழங்கப்பட்டதிலிருந்து 0.10 சதவீதம் குறைத்து 8.55 சதவீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கு முன்பு 2016-17-ல் இது 8.65 சதவீதமாகவும் 2015-16-ல் 8.80 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து