7 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் நடிகர் ஆர்யா மணப்பெண் தேடுகிறார்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      சினிமா
Arya married

Source: provided

தனியார் டெலிவிஷன் நிகழ்ச்சி மூலமாக மணமகளை அவர் தேர்ந்தெடுக்கிறார். நடிகர் ஆர்யா, 2005-ல் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமாகி 13 வருடங்களாக முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். நான் கடவுள், அவன் இவன், வேட்டை, ராஜாராணி, கடம்பன் என்று பல முக்கிய படங்களில் அவர் நடித்துள்ளார்.

தற்போது கஜினிகாந்த், சந்தனத்தேவன் படங்களில் நடித்து வருகிறார்.ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது. சில நடிகைகளுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அவற்றை மறுத்தார். இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு பெண் பார்ப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் வீடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்கள் தங்களை பற்றிய பெயர், படிப்பு, குடும்ப விவரங்களை தெரிவிக்கும்படி ஒரு டெலிபோன் நம்பரையும் வெளியிட்டு இருந்தார். இதன் மூலம் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து 7 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இவர்களில் 18 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த 18 பேரில் இருந்து தனக்கு பொருத்தமான மணமகளை ஆர்யா தேர்வு செய்கிறார். தனியார் டெலிவிஷன் நிகழ்ச்சி மூலமாக மணமகளை அவர் தேர்ந்தெடுக்கிறார். எனவே விரைவில் ஆர்யா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஷாலும் திருமணத்துக்கு தயாராகிறார். ஆர்யா திருமணம் முடிந்ததும் எனது திருமணம் நடக்கும் என்று அவர் கூறியுள்ளார். இருவரது திருமணமும் இந்த வருடத்திலேயே நடக்கும் என்று தெரிகிறது.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து