முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கி நாட்டைச் சேர்ந்த 15 பேருக்கு தூக்குத் தண்டனை அறிவிப்பு

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

பாக்தாத்,  ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளாக இருநது அந்நாட்டு ராணுவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த 15 பேர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஈராக் ராணுவம் தற்பொழுது மீட்டெடுத்தது. அப்பொழுது ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்து ராணுவத்துக்கு எதிராக சண்டையில் ஈடுபட்ட ஏராளமானோர் பிடிபட்டனர்.

இவர்கள் துருக்கி மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் மீது பாக்தாத் நகரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் துருக்கி நாட்டைச் சேர்ந்த 15 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் சட்டப்படி மேல் முறையீடு செய்ய இயலும் என்று நீதிமன்ற கோர்ட்டு செய்தி தொடர்பாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த வாரம் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஒரு துருக்கி பெண்ணுக்கு தூக்குத் தண்டனையும், 10 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து