பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடு , விலையில்லா வெள்ளாடுகளை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      சிவகங்கை
Animals husbandry 27 2 18

சிவகங்கை- சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், முடிகண்டம் ஊராட்சியில்   கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் புதிய கால்நடை கிளை நிலையங்கள் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடு மற்றும் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி  கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பேசுகையில்,
          முதல்வர் ஜெயலலிதா தனி மனிதன் பொருளாதாரம் முன்னேற்றம் பெற பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி செயல்படுத்தி வந்தார்கள். காரணம் ஒவ்வொரு மனிதனின் பொருளாதாரம் உயர்ந்தால்தான் அந்த குடும்பம் முழுமையாக வளர்ச்சி பெறும். அதை எண்ணி அதற்கேற்ப திட்டங்களை தீட்டி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா முதல்வராக இருந்த காலத்தில்தான் அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்த துவங்கின. அதிலும் குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எப்பொழுதுமே தனிக்கவனம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில்தான் விலையில்லா கறவை மாடு மற்றும் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தினார்கள். இதன் மூலம் கிராமப்பகுதியிலுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்வதுடன் சேர்த்து மாடு மற்றும் ஆடு வளர்க்கும் பணியை மேற்கொண்டு பயன்பெற வேண்டுமென அவர்களின் ஏழ்மையை எண்ணி வறுமையில் உள்ளவர்களுக்கு விலையில்லா கறவை மாடு மற்றும் விலையில்லா ஆடுகளை வழங்கினார்கள். இதன் மூலம் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயன்பெற்று ஆடுகளை அதிகளவில் வளர்த்து வருவதுடன் தற்பொழுது கறவை மாடுகள் மூலமாகவும் போதிய அளவு பால் விற்பனை செய்து அதன் மூலம் நிரந்தரமான பொருளாதாரத்தை பெற்று பயன்பெற்று வருகிறார்கள்.
                  மேலும் பொதுமக்களின் கோரிக்கைகள் ஏற்ப கால்நடைகளின் எண்ணிக்கையை பொறுத்து கால்நடை கிளை மருந்தகங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன மற்றும் முடிகண்டம், சேத்தூர், வெற்றியூர் ஆகியப் பகுதிகளில் புதிய கால்நடை கிளை மருந்தகம் துவக்க கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று 3 பகுதிகளிலும் புதிய கால்நடை கிளை மருந்தகம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நோக்கம் இப்பகுதியிலுள்ள கால்நடை வளர்ப்போர் இந்த மருந்தகங்களை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வதுடன் கால்கடைகளை நன்றாக பராமரிப்பதுடன் அதிக அளவு கால்நடைகளை வளர்த்து அதன் மூலம் பொருளாதாரம் முன்னேற்றம் பெறவேண்டும் என            என கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
       பின்னர் அமைச்சர் புதிய கால்நடை கிளை மருந்தகங்களை திறந்து வைத்ததுடன் பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடு மற்றும் விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினார்.
       இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.கருணாகரன், உதவி இயக்குநர் மரு.கோவில்ராஜா, கால்நடை மருத்துவர் ராஜேஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து