முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலசபாக்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் பன்னீர்செல்வம் எம்எல்ஏ துவக்கிவைத்தார்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 70வது பிறந்த நாள் விழாவையட்டி தி.மலை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ரமண மகரிஷி கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிக்சை முகாம் நடைபெற்றது.

கண் சிகிக்சை முகாம்

இம்முகாமுக்கு வந்த அனைவரையும் ரமண மகரிஷி கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஆர்.ரவிச்சந்திரன் வரவேற்றார். முகாமுக்கு தலைமையேற்று கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் முகாமினை துவக்கிவைத்தார். இந்த முகாமில் கண்ணில் புரை நீக்குதல், நீர்ப்பை அடைப்பு, மாலைக்கண் - மாறுகண், தொடர்ச்சியான தலைவலி, கிட்ட பார்வை, எட்டப்பார்வை, ஒத்த தலைவலி - கண்ணீரில் பூ விழுதல் போன்ற நோய்களுக்கு கண் மருத்துவ குழுவினர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சிகிச்சை அளித்தனர்.

இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் அதிமுக தெற்கு மாவட்ட துணை செயலாளர் எல்.என்.துரை, கலசபாக்கம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் கருணாமூர்த்தி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் பி.பொய்யாமொழி, மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாம் முடிவில் முதுநிலை முகாம் அமைப்பாளர் என்.பாலாஜி நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து