பேடிஎம் மால், டிவிஎஸ் ஆட்டோ அசிஸ்ட் ஒப்பந்தம்

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      வர்த்தகம்
tvs-aa-vehicle

நீண்ட பயணத்தின்போது கார் மக்கர் செய்தால் எப்படியிருக்கும்? அத்தகைய சூழலில் உதவ டிவிஎஸ் ஆட்டோ அசிஸ்ட் நிறுவனமும் பேடிஎம் மால் நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன. சாலையோர மீட்பு என்ற அடிப்படையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு இத்தகைய சேவைகளை 24 மணி நேரமும் வாரம் முழுவதும் அளிக்க முடிவு செய்துள்ளன. வாடிக்கையாளர்கள் தனியாகவும் அல்லது வாகனத்தை வாங்கும்போதே இத்தகைய வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.

இத்தகைய வசதியை வாடிக்கையாளர்கள் டிவிஎஸ் ஆட்டோ அசிஸ்ட் வாயிலாக 28 மாநிலங்களில் 1,795 நகங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.  வாகனத்தை சர்வீஸ் மையத்துக்கு எடுத்துச்செல்லுதல், எரிபொருள் தீர்ந்து போதல், சாவி பிரச்சினை, டயர் பிரச்சினை, முதலுதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் இதன் மூலம் பெறலாம்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து