முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் அ.தி.மு.க மற்றும் தெலங்குதேசம் எம்.பி.க்கள் அமளி இரு சபைகளும் ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க.எம்.பி.க்கள்  பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதே போல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்குதேச எம்.பி.கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

தொடர் பாதிப்பு...
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி மார்ச்  5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 6-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடருக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்றம் தொடங்கியது முதலே பஞ்சாப் நேஷனல் வங்கியை மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய நீரவ் மோடி விவகாரம், ஆந்திராவிற்கு தனி அந்தஸ்து கோரி தெலுங்குதேசம் எம்.பி.களின் போராட்டம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.கள் போராட்டம் என பாராளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க. அமளி...
பா.ஜ.க.வுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் .காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ள நிலையில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கைக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நேற்று தெலுங்குதேசம் கட்சி வெளியேறியுள்ளது. இதே போன்று அ.தி.மு.க எம்.பி.களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினர். எம்.பி.களின் தொடர் அமளியால் பாராளுமன்றத்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

நாள் முழுவதும்...
இதனால் லோக்சபா முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் சபை மீண்டும் கூடிய போது அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போன்று ராஜ்யசபா பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இரு சபைகளும் மீண்டும் மார்ச் 19 அதாவது திங்கட்கிழமை கூடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து