தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் : செயற்பொறியாளர் சீனிவாசன் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      தஞ்சாவூர்
Thanjai

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி புதிய கட்டடங்கள் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் மற்றும் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு அடுக்குமாடி கட்டடம் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை செய்தியாளர்களுடன் செயற்பொறியாளர் சீனிவாசன் நேற்று(20.03.2018) பார்வையிட்டார்.

பேட்டி

தஞ்சாவூர் மாநகராட்சி புதிய கட்டடங்கள், புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் வணிக வளாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதையும், இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரு சக்கர அடுக்கு மாடி வாகன கட்டடம் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு செய்தியாளர் பயணத்தில் செய்தியாளர்களிடம் செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்ததாவது,

தஞ்சாவூர் மாநகராட்சி கடந்த 17.02.2014 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்பொழுது மாநகராட்சி அலுவலகம் தஞ்சாவூரின் முக்கிய பகுதியான காந்திஜி ரோட்டில் இயங்கி வருகிறது. மேற்படி கட்டடம் ;கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், தற்பொழுது மாநகராட்;சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அலுவலகப் பணிகளுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும், மேற்கண்ட இடத்தில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் இடைவெளி நிரப்பும் திட்ட நிதியின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி அலுவலக வளாகம் 8300 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. புதியதாக கட்டப்படும் மாநகராட்சி அலுவலக கட்டடத்;தின் தரைத்தளம் 2200 சதுர மீட்டர் பரப்பளவில் பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம், தெரு விளக்கு, பொது சுகாதாரம், பிறப்பு- இறப்பு பதிவுகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஆணையாளர் அறை, கூட்ட அறை, வசூல் மையம், பொறியியல் பிரிவு மற்றும் மாநகர் நலப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும் முதல் தளம் 1950 சதுர மீட்டர் பரப்பளவில் மேயர் அறை, மாமன்றக் கூடம், வருவாய் பிரிவு, மாநகரமைப்பு பிரிவு மற்றும் பதிவறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும். இரண்டாவது தளம் 1408 சதுர மீட்டர் பரப்பளவில் நில அளவை பிரிவு, உணவு உட்கொள்ளும் அறை, பணியாளர்களின் ஓய்வு அறை மற்றம் எதிர்கால விரிவாக்க பணிகளுக்கான கூடுதல் அறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும்.

மேலும், இருக்கை வசதிகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் புல்தரை ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைந்து முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்படவுள்ளது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் முன் பகுதி வலப்புறத்தில் 25 எண்ணிக்கை வணிக வளாகங்கள், இடது புறத்தில் 25 எண்ணிக்கை வணிக வளாகங்கள் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. மேலும், வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் இரு சக்கர வாகனங்களில் வந்து பேருந்து நிலையத்தில் நிறுத்துவதற்கு வசதியாக புதிய பேருந்து நிலையத்தில் இரு சக்கர அடுக்கு மாடி வாகனம் நிறுத்துமிடம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ளது.

இதனால் இரு சக்கர வாகனங்கள், மழை மற்றும் வெயில் காலங்களில் பாதுகாப்பாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு மாநகராட்சியின் மூலம் புதிய அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. செய்தியாளர் பயணத்தில் மாநகராட்;சி உதவிபொறியாளர் என்.ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுலவர் (செய்தி) போ.சுருளிபிரபு, இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், பணி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து