முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது: கர்நாடக பிரசாரத்தில் ராகுல் காந்தி பேச்சு

புதன்கிழமை, 21 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : பாரதிய ஜனதா கட்சி சமூகத்தில் பிரிவிணையை தூண்டிவிட்டு மோதலை உருவாக்குகிறது. ஆனால் காங்கிரஸ் சமூகத்தில் மாற்றத்தையும், அமைதியையும் ஏற்படுத்த முயற்சிக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று மங்களூரு சென்ற அவரை முதல்வர் சித்தராமையா, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

காங்கிரஸ் தொண்டர் கிருஷ்ணாவின் வீட்டுக்கு சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அங்கு காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். இதையடுத்து உடுப்பியை அடுத்துள்ள பாடுபிதரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பொருளாதார கொள்கைகள் பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சாதகமாக இருக்கிறது. ஏழைகளையும் விவசாயிகளையும் வாட்டி வதைக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் 15 பணக்காரர்களின் ரூ.2.5 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால் கோடிக்கணக்கான விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.

இதுபற்றி கேள்வி கேட்டால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது மத்திய அரசின் கொள்கை அல்ல என பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் சொல்கிறார்கள். அதே நேரத்தில் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் விவசாயிகளின் ரூ.8 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தில் இரு பிரிவினரிடையே பாஜக பிரிவிணையை தூண்டிவிட்டு மோதலை உருவாக்குகிறது. கலவரத்தின் மூலம் வாக்குகளை அறுவடை செய்ய முயற்சிக்கிறது. ஆனால் காங்கிரஸ் சமூக மாற்றத்துக்கு வித்திட்ட பசவண்ணர், நாராயண குரு போன்றோரை பின்பற்றுகிறது. சமூகத்தில் மாற்றத்தையும், அமைதியையும் ஏற்படுத்த முயற்சிக்கிறது. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான ஆட்சியில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறைந்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து