முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வள்ளிமதுரை கிராம மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் எஸ்.மலர்விழி வழங்கினார்

புதன்கிழமை, 21 மார்ச் 2018      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.21 இலட்சத்து 45 ஆயிரத்து 453 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் எஸ்.மலர்விழி, வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

143 பயனாளிகளுக்கு ரூ.21 இலட்சத்து 45 ஆயிரத்து 453 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் எஸ்.மலர்விழி, வழங்கி இம்முகாமில் பேசியதாவது :-

 

தருமபுரி மாவட்டத்தில் மாதம் தோறும் ஒருநாள் ஒரு கிராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்கள் வருகை தந்து அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்கவுரை ஆற்றியுள்ளார்கள். மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல துறைகளின் சார்பில் பொது மக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் 192 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. உடனடியாக 53 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்களை பரிசீலனை செய்து தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசின் நலதிட்ட உதவிகள் முழுமையாக கிடைத்திட விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 1,18,888 தனிநபர் கழிப்பறை தலாரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டி வழங்கிட ரூ.142.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கிராம புறங்களில் உள்ள தாய்மார்கள் தனிநபர் கழிப்பறையை பயன்படுத்தி சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதுடன் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். தனிநபர் கழிப்பறை பயன்படுத்துவதால் குழந்தைகள் தொற்று நோய் பரவாமல் பாதுகாக்கப் படுவார்கள். மேலும் கோடை காலங்களில் குடிநீர் மற்றும் இதரதேவைகளுக்காக தண்ணீரை சேமித்து பயன்படுத்தும் போது தண்ணீரை மூடிவைத்து பயன்படுத்த வேண்டும். இதனால் டெங்கு போன்ற கொசு புழுக்கள் உருவாகுவதை முற்றிலும் தவிர்க்கலாம். டெங்கு காய்ச்சல் பரவாமல் ஆரோக்கியத்துடன் வாழ மாவட்டத்திலுள்ள தாய்மார்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.

வாரிசு சான்றிதழ்

 

முன்னதாக வருவாய்த் துறையின் சார்பில் பிறப்புச்சான்று 4 பயனாளிகளுக்கும், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகையாக 11 பயனாளிகளுக்கு ரூ.13 இலட்சத்து 20 ஆயிரமும், தற்காலிக இயலாமைக்கான மாதாந்திர உதவித்தொகையாக 6 பயனாளிகளுக்கு 3 இலட்சத்து 78 ஆயிரமும், வாரிசு சான்றிதழ் 3 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை 15 பயனாளிகளுக்கு 79 ஆயிரத்து 500 மதிப்பிலும், பழங்குடியினர் சாதிசான்று 81 பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா மாற்றம் 6 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.87 ஆயிரத்து 188 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 80 ஆயிரத்து 765 மதிப்பிலும் என ஆக மொத்தம் ரூ.21 இலட்சத்து 45 ஆயிரத்து 453 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் எஸ்.மலர்விழி, வழங்கினார்.

இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் பத்மாவதி, இணை இயக்குநர் வேளாண்மை சுசிலா, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) முத்தையன்,மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் அமிர்பாஷா, தாட்கோ பொது மேலாளர் வைத்தியநாதன், தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், உதவி இயக்குநர் (கலால்) மல்லிகா, வட்டாட்சியர் பரமேஸ்வரி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து