முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணிய திருக்கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      தேனி
Image Unavailable

தேனி -தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவிற்கான கொடியேற்றம்  கடந்த 21ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டபகப்படி நடைபெற்று வந்தது. இவ்விழாவின் முக்கிய திருவிழாவான பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். இத்திருத்தேரில் உற்சவமூர்த்தி சோமஸ்கந்தர் எழுந்தருள தேரோட்டம் கச்சேரி ரோடு, கீழரதவீதி, தெற்குரதவீதி வழியாக வந்து நிலையை அடைந்தது. இத்தேரோட்டத்தில் பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா, நகர செயலாளர் என்.வி.ராதா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹீர், பாலசுப்பிரமணிய திருக்கோவில் விழாகமிட்டியினர் சசிதரன், சிதம்பரசூரியவேலு, வட்டாட்சியர் கிருஷ்ணகுமார்,  தக்கார் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் கழக விவசாய அணி கண்ணன், நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம்,    வி.ப.ஜெயபிரதீப், கூட்டுறவு பண்டகசாலை இயக்குநர் அன்பு, மாவட்ட பிரதிநிதி சந்தோஷம், நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் நாராயணன், அரண்மனைசுப்பு மற்றும்   ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து