எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வைஷ்ணவி திருமண மண்டபத்தில் சமூக நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஏழை பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் திருமாங்கல்ய தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கலந்து கொண்டு 115 பயனாளிகளுக்கு 920 கிராம் தங்கம் மற்றும் ரூ.39.25 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை வழங்கினார். இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது:-
நிதியுதவி வழங்கும் விழா
புரட்சித்தலைவி அம்மா தன்னலமில்லாமல் ஏழை பணக்காரர் வேறுபாடுயின்றி அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பெண்களுக்கு எவ்வித கவலையும் இருக்க கூடாது என்பதற்காகவே எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். பெண்கள் நன்றாக படித்து பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பதற்காகவே படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தினார்கள். அம்மா பட்டம் மற்றும் பட்டயபடிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கமும், 10 ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. பின்பு புரட்சித் தலைவி அம்மா திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். பெண்களின் படிப்பை பாதியில் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகவும் ஏழைகள் தங்களின் குழந்தைகளின் திருமணத்திற்காக சிரமபடக் கூடாது என்பதற்காகவும் அம்மா இத்திட்டத்தை செயல்படுத்தினார்கள். அம்மாவின் அரசு தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்றுள்ளனர். அரசின் திட்டங்களை பெற்றுள்ள நீங்கள் இவைகளை பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். என பேசினார்.இவ்விழாவில் கலெக்டர் பேசியதாவது:-திருநெல்வேலி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் மூலம் சங்கரன்கோவில், குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஒன்றியங்களை சேர்ந்த பட்டப்படிப்பு படித்த 42 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.21.00 லட்சம் உதவிதொகையும், 10 ம் வகுப்பு படித்த 73 பயனாளிகளுக்கு தலா ரூ.25 வீதம் ரூ.18.25 லட்சம் உதவிதொகையும,;; அனைவருக்கும் தலா 8 கிராம் தங்கமும் என மொத்தம் 115 பயனாளிகளுக் ரூ.39.25 லட்சம் உதவித் தொகையும், 920 கிராம் தங்கமும் இன்று வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித் திட்டம் பெண்களின் படிப்பை ஊக்கவிக்கும் திட்டமாகும். நமது மாவட்டத்திலும் ஒரு சில சமூகத்தில் குழந்தை திருமணங்கள் செய்யும் பழக்கம் உள்ளது. இது போன்ற திட்டங்களால் படிக்க வைக்க வேண்டும் என்ற என்னமும், சரியான வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு எற்படும். விதவை மருமணம், கலப்பு திருமணம் உள்ளிட்ட பல்வேறு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டங்களும் உள்ளது. இன்று உதவித்தொகை பெறும் நீங்கள் இத்திட்டம் குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் குழந்தைகளை படிக்க வைக்க ஊக்கப்படுத்திட வேண்டும். சங்கரன்கோவில் பகுதியில் இலவச வைபை வசதி மற்றும் பல்வேறு கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரப்படும் என பேசினார்.நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, சங்கரன்கோவில் வட்டாட்சியர் ராஜேந்திரன், டான்பெட் துணை தலைவர் கண்ணன் (எ) ராஜூ, ஆவின் தலைவர் ரமேஷ், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப்பையாபாண்டியன், முக்கிய பிரமுகர் வேல்முருகன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


