இன்று முதல் ‘இ-பில்’ கட்டாயம்

சனிக்கிழமை, 31 மார்ச் 2018      வர்த்தகம்
e-bill

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்திய மத்திய அரசு, வரி ஏய்ப்பை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு எலக்ட்ரானிக் பில் அல்லது ‘இ-பில்’ கட்டாயம் என அறிவித்தது.

இதைத்தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு ஏப்ரல் 1-ம் தேதி (இன்று) முதலும், மாநிலங்களுக்கு உள்ளே நடைபெறும் போக்குவரத்துக்கு 15-ம் தேதி முதலும் இ-பில் கட்டாயமாக்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு எலக்ட்ரானிக் பில் அல்லது இ-பில் கட்டாயம் என அரசு அறிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து