பள்ளிசெல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்பு பணி குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      திருவாரூர்
thiruvarur

 

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிசெல்லாஇடைநின்ற மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்பு பணி 2018-19 குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

 கணக்கெடுப்பு பணி

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, 6 முதல் 14 வயதுடைய அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்ந்து கல்வி கற்க வழிவகை செய்து தொடக்க கல்வியை முடிக்க செய்வது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் நோக்கமாகம்.6 முதல் 14 வயதுடைய பள்ளிசெல்லா குழந்தைகளையும், மாற்றுத்திறனுடைய குழந்தைகளையும் கண்டறிந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இவ்வாண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் இணைந்து 6 முதல் 18 வயதுடைய பள்ளிசெல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்பு ஏப்ரல் 19ம் தேதி முதல் மே மாதம் 31 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி அலுவலர்கள் கணக்கெடுப்பு பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஒருங்;கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் போது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றனர் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைவருக்கும் கல்வி இயக்க கணக்கெடுப்பின் போது கண்டறியப்பட்ட மாற்றத்திறன் குழந்தைகளுக்கான தேசிய அடையாள அட்டை , உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கிட வேண்டும். பள்ளிசெல்லா இடைநின்ற மற்றும் மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்காக 10 ஒன்றியங்களிலும் பள்ளிகளில் செயல்படுகின்ற சிறப்பு பயிற்சி மையங்கள், பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் சத்துணவு மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

கண்டறியப்பட்ட குழந்தைகள் விவரங்களை தேசிய தகவல் மையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைத்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தனமணி,மாவட்ட கல்வி அலுவலர் சரோஜா,மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயா,உதவி திட்ட அலுவலர் சங்கரநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து