இந்தியாவில் ஆலையை விரிவுபடுத்தும் ஜியோமி

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      வர்த்தகம்
xiaomi

சீனாவின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஜியோமி இந்தியாவில் மூன்று ஆலைகளை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இவை தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் அமையும் என்று நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் மனு ஜெயின் தெரிவித்தார்.

ஒரு ஆலை ஸ்ரீபெரும்புதூரிலும் மற்றொன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் அமையும் என்றும் தெரிவித்தார். பிரிண்டட் சர்கியூட் போர்டு (பிசிபி) உற்பத்தி ஆலை ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்படும் என்றார். ஒரு விநாடிக்கு இரண்டு ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலைகள் இருக்கும். இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என ஜெயின் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து